உ
வக்ர துண்ட
மஹாகாய
ஸூர்ய கோடி ஸமப்ரப !
அவிக்னம் குருமே தேவ
ஸர்வ கார்யேஷு ஸர்வதா !!”
ஸூர்ய கோடி ஸமப்ரப !
அவிக்னம் குருமே தேவ
ஸர்வ கார்யேஷு ஸர்வதா !!”
மண்ணின்
ஓர்
ஐங்குணமாகி
வதிவான்
எவன்
நீரிடை
நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
ஓம் ஸ்ரீம்
ஓம் சற்குரு பதமே
சாப பாவ
விமோட்சனம்
ரோக அகங்கார
துர்விமோட்சனம்
சர்வ தேவ
சகல சித்த ஒளிரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம
நாதவிந்து கலாதி நமோ நமோ
வேதமந்திர சொரூபா நமோ நமோ
பெட்டியதிலுலவாத பெரும் பொருளொன்றுண்டு
பெருகவென அது திறக்கும் பெருந்திறவு கோலும்
எட்டிரண்டு மறியாதேன் என்கையிலே கொடுத்தீர் இது தருணம்
திறந்ததனை எடுக்க முயல்கின்றேன்
அட்டிசெய்ய நினையாதீர்
அறைக்கண முந்தறியேன் அரைக்கணத்துக் காயிரமாயிரம் கோடியாக
வட்டியிட்டு உம்மிடத்தே
வாங்குவனும் மாணையே மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே
இனி வருவன ........
சித்தியென்ன பத்தாகு
மாதமப்பா
சிறப்பான சல்லி
வேரென்றும் பேரு
அத்தியென்ன கொடிமூல
மென்றும் பேரு
ஆனதொரு கன்னிப்பெண்ணென்றும் பேரு
வத்தியே வாலைப்பெண்ணென்றும் பேரு
வளமான சத்திப்பெண்ணென்றும் பேரு
சத்தியே பத்து
வயதென்றும் பேரு
சமர்த்தான ஞானப்பெண்ணென்றும் பேரு
சொன்னேமே அறுபத்துனாலு பேருஞ்
சொன்னதெல்லா மித்தனை முப்பூவுக்கப்பா
அன்னோமே அறுபத்தினாலு சித்தர்
அவரவர்களிட்சைப்படி சாஸ்திரஞ்சொன்னார்
வன்னோமே தலைக்காலாய்
சொல்லிப்போட்டார்
வளமான சித்தர்கள்தான் வகுத்த நூல்கள்
மன்னோமே சித்தர்கள்தான் கூடிக்கொண்டு
மகத்தான பாஷைகளால்
மறைத்திட்டாரே
மேலும் .....
பாரப்பா அகாரம்
உகாரத்தை உண்ணும்
பாங்கான உகாரம்
மகாரத்தை உண்ணும்
நேரப்பா மகாரமது
விந்தை உண்ணும்
நேரான விந்துவும்
நாதத்தை உண்ணும்
சேரப்பா நாதமுஞ்
சத்தியைத் தானுண்ணும்
சேர்ந்து நின்ற
சத்தியதுஞ் சிவத்தை உண்ணும்
ஆரப்பா சிவந்தன்னை
பரந்தான் உண்ணும்
அப்பரத்தே நின்றவிடமறிந்து உண்ணும்
அப்புரத்தே நின்றவிடமறிந்து உண்ணே.
என்ன
சொல்ல வருகிறார் என மயங்கவேண்டாம். மனிதன் பிறப்பெடுத்த நாள்முதலாய் பிறந்து
இறந்து மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து கால சக்கரத்தில் சிக்குண்டு
வருந்துகிறான். செத்துபோவதற்கு விரும்பாத மனிதன் மீண்டும்
பிறவாதிருக்க ஆசைப்படுகிறான்.
பிறவாதிருக்க
என்ன செய்யவேண்டும் என்று யோசித்த மனிதன் தானம், தருமம், ஜெபம், யோகம் இன்னபிற ஆன்மீக
வழிகளில் ஈடுபட்டும் தன் முயற்சியில் வெற்றிப்பெற்றானில்லை. நூறாண்டு வாழ்ந்தாலும்
இறுதியில் மரணத்தைத் தழுவுகிறான்.
மரணத்தை
வெற்றிபெறத்தக்க, மீண்டும் மீண்டும் தாய்க்கருப்பை நுழையாதிருக்க மருந்தொன்றை நமது
முன்னோர்கள் மறைமுகமாக நமக்கு சொல்லி வைத்துள்ளனர். அதற்க்கான திறவுக்கோல்
தான் நீங்கள் மேலே கண்டது.
இந்த
பிரபஞ்சம் பற்றிய இரகசியத்தை பலரும் பலவிதமாக குறிப்பிட்டு உள்ளார்கள்.
நான்
புரிந்துகொண்டதை புரிந்துகொண்ட அளவில் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
இந்த
பிரபஞ்சம் ஐந்து பூதங்களின் சேர்க்கையால் ஆனது என்பது எல்லோரும் அறிந்ததே.
மண், காற்று, தீ, தண்ணீர்
மற்றும் ஆகாயம் என்கிற பூதங்களால் இந்த அண்டமும் பிண்டமும் கட்டப்பட்டுள்ளது.
அண்டத்தையும்
பிண்டத்தையும் படைத்தவன் பரம்பொருளான இறை. இந்த இறைவன் ஒருவனே. ஏனெனில் படைப்பாளி
ஒருவனாகதானே இருக்கமுடியும்.
சலனமற்று
இருக்கையில் பரம்பொருள் சிவமென அறியப்படுகிறது. அதுவே இயங்கும்போது
சக்தியாக உணரப்படுகிறது.
இந்த
சக்திதான் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் மற்றும் மறைத்தல் இவற்றிற்கு காரணமாகி எங்கும் எல்லாமுமாய்
வியாபித்துள்ளது.
இத்தொழில்களின்
காரணகர்த்தாக்களாக பிரம்மா, விஷ்ணு, சிவன், மகேஸ்வரன், சதாசிவம் எனும் ஐந்து
கர்த்தாக்கள் உள்ளதாக நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். இவர்களோடு இரண்டற
கலந்தவர்களாக சரஸ்வதி, லக்ஷ்மி, சக்தி, மகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகிய ஐந்து
தேவியரை குறிப்பிடுகின்றோம்.
உலகில்
ஜீவன்கள் படைக்கப்பட்டு காக்கப்பட்டு பின் அழிக்கப்படுகின்றன. பிரவணத்தை அறிந்துகொண்ட
ஜீவன்கள் சதா காக்கப்படுகின்றன. பிரணவத்தோடு கலந்த ஜீவன்கள் மட்டுமே
நிரந்தரமாக மறைக்கப்படுகின்றன
நாம்
பிரணவத்தை அறிந்துகொள்வது மட்டுமல்ல அதோடு கலந்துவிட வேண்டும்.
அதற்க்கு
சிவ குடும்பத்தை சற்று உற்று நோக்கவேண்டும்.
சதாசிவமாகவும்
மகேஸ்வரனாகவும் இருக்கிற சிவன் இந்த பிரபஞ்சத்தை தோற்றுவிக்கும்போது
பிரம்மாவாக
செயல்பட்டும் அவைகளை காக்கும்போது விஷ்ணுவாகவும் இருந்து அவைகளை சம்கரிக்கவும்
செய்கிறான்.
ஐந்து
முகங்களை உடைய செந்நிறமான சிவன் வெள்ளை நிறமுள்ள சக்தியும் ஒன்றாக இணைந்து பூதங்களுக்கு
அதிபதியான ஆன்மாவிற்கு மூலாதாரமான தலைப்பிள்ளையான கரியநிறமுள்ள கணபதியை படைத்தான். பின் அவனே தன்னில் கலந்துள்ள சக்தியோடு கூடி அறுமுகனான செந்நிறமுள்ள
குமரனைப் படைத்தான். இவன் பிரணவத்தை தன்னைப் பெற்றவனுக்கே உபதேசித்த பரம்பொருள். இவர்கள் மனித
குலத்திற்கு வழங்கிய பிரசாதம் திருநீறே. இறுதியில் எல்லாம் பிடிசாம்பலே என்பதை அறியலாம்.
ஜீவன்கள்
மீண்டும் மீண்டும் பிறக்கவும் இறக்கவும் செய்ய இறைவனால் படைக்கப்பட்டதே மாயை.
மாயையைப்
பற்றிய ரகசியம் அல்லது பரம்பொருளின் ரகசியம் ஆராய்ந்து அறிந்து அதனை வெல்லும்
மார்கத்தை மனித இனம் மிகவும் ரகசியமாகவே வைத்துள்ளது. திறவுக்கோலை புராணம், இதிகாசம் வாயிலாக
கதைகளிலும் கோவில்களில் சிற்பங்களாகவும் சொல்லப்பட்டு இருந்தாலும் நாம்
புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் இருக்கிறோம்.
கோவில்
கோபுரங்களில் உள்ள ஆண் பெண் அந்தரங்க சுதை சிற்பங்கள் நமக்கு வெறும் காமத்தை
தூண்டும் செயலாகவே பார்க்கிறோம்.
"ஆணையும் பெண்ணையும் நீங்கள் ஒன்றாக்கினால்
இறைவனின் சாம்ராஜ்யத்தில் நுழைவீர்கள்" என்றார்
இயேசு.
ஆண்
பெண் சேர்ந்தால் ஆணின் விந்தும் பெண்ணின் சுரோணிதமும் பக்குவமாக இணைந்து கரு
உற்பத்தியாகிறது. கரு எல்லா ஜீவனிடத்திலும் முட்டையாகதான் இருக்கிறது. முட்டையை அண்டம்
என்கிறோம். எனவே அண்டத்தில் ஆண் பெண் ஐக்கியமாகயுள்ளது. இதில் விந்துவில் உப்பு
குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ கரு ஜெனிப்பதில்லை. அதே போன்று
சுரோநிதத்தில் புளி குறைந்தாலோ அல்லது மிகுதியானாலோ கரு ஜெனிப்பதில்லை. இவைகளை
கட்டுப்படுத்துவதில் உப்பு தன்மை மிகுந்த பங்களிப்பை தருகிறது.
மண், காற்று, தீ, தண்ணீர், ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களில்
விந்துவாகிய ரசமானது நீரோடும் காற்றோடும் உறவாடும். சுரோணிதமான கெந்தி
காற்றோடும் தீயோடும் உறவாடும். மண் அம்சமாக இருக்கும் உப்பானது மற்ற
மூன்றையும் தன்னகத்துள்ளே வைத்திருக்கும். இதில் தண்ணீரும் தீயும் ஒன்றுக்கொன்று பகையாகும். இவை கட்டிக்கொண்டால்
கருப்பாகும்..
ஆணோடு
இணையும் சுரோனிதமான கெந்தியும் பெண்ணோடு இணையும் விந்துவாகிய ரசமும் உப்பிலே
உறவாடிக்கொண்டுள்ளது. மண் அம்சமான இந்த உடம்பை காற்று, தீ, தண்ணீர் ஆகிய மூன்று
பூதங்கள் ஆட்சி செய்துகொண்டுள்ளன. இதில் ஏதாவது ஒன்று குறையினும் மிகினும் நோய் அண்டுகிறது.
இவைகளை
பிரித்து கூட்ட முடிந்தால் தேகம் அழியாத தன்மையைப்பெறும். ஜீவன் நிலைத்திருக்க
ஒரு நிரந்தர கூடு கிடைக்கும். வாடகை வீட்டை உரிமையாளன் கேக்கும்போது
காலிசெய்து தரவேண்டும். எனவே சொந்த வீடு அமைத்துக்கொள்ளவே நாம்
ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அதற்காக உழைப்பவன் தனக்கான சொந்த வீட்டை
கட்டிக்கொள்கிறான் .
ஜடப்பொருள்களில்
கூட புதியதாக ஒன்றை உருவாக்கும் முன்
பழையதை அழிக்கவேண்டியுள்ளது. அதன் மூலக்கூறுகளை சிதைத்தோ அல்லது பிரித்தோ ஆகவேண்டும். தேவையற்றதை முழுவதுமாக
மறைக்கவேண்டியுள்ளது. பின் மிச்சம் இருப்பதை சரியான விகிதத்தில்
இணைத்து புதிய ஒன்றை உருவாக்குகிறோம்.
கோவிலில்
வெஞ்சாரையும் கருஞ்சாரையும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்திருக்க அதன் உச்சியில் அமுத
கலசம் ஏந்திய ஒரு பெண்ணுருவமோ அல்லது ஒரு சிவலிங்கமோ இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதை வழிப்பட்டால் தோஷம்
நீங்கி மோட்சம் கிட்டும்
உலோகங்கள்
அனைத்தும் ரசத்தையும் கெந்தியையும் அடிப்படையாக கொண்டவை. ஒவ்வொரு உலோகத்திலேயும் இவற்றின் கலவை சதவீதம்
மாறுபட்டிருக்கும். இவைகளின் மிக சரியான கலவைதான் தங்கம். தங்கமே உலோகங்களில்
சிறந்தது. எனவே பிற உலோகங்களின் மூலக்கூற்றினை பிரித்து ஒரு குறிப்பிட்ட கலவையில்
மீண்டும் சேர்த்தால் தங்கம் கிடைக்கும். இந்த பிரித்து கூட்டுகின்ற செயலுக்கு உப்பு
உதவுகிறது. இதுவே ரசவாதம் எனப்படும்.
நமது
குறிக்கோள் தங்கத்தை அடைவதில் இல்லை மாறாக சிவத்தன்மை அடைவதே. சிவனையும் அவனது
திருவிளையாடல்களையும் கூர்ந்து நோக்கினால் மேலான தங்கமான சிவகதி பெறலாம்.
சூரியனும்
சந்திரனும் ஒன்று சேர்ந்தால் அதை அமாவாசை
என்கிறோம். அமாவாசையை அறிந்தவன் காற்றைக் கட்டவல்லவனாகிறான். காற்று பிராணன் அபானனாக
நம்முள் இயங்கி கொண்டுள்ளது . இதை கட்டினால் தேகம் அழிவதை தடுக்கலாம்.
வட்டம்
- பிரபஞ்சம்; முக்கோணம் - ஆத்மா ; சதுரம் - நான்கு பூதங்கள்; உறைந்திருப்பது உப்பு
நான்கு
+ மூன்று = ஏழு (பிறப்பு)
உப்பு - கட்ட, ரசம் - அணு கூட்டமைப்பை மாற்ற, கெந்தி - எரித்து இளக்கி இறுக்க முப்பு
இதை பல
பெயர்களால் சுட்டிக்காட்டி, மீண்டும் மீண்டும் சொல்லிக்காட்டி நம்மை
குழப்பத்தில் தவிக்க விட்டுள்ளனர் சித்தர்கள். இறைவன் எப்படி பல
பெயர்களால் குறிக்கப்பட்டு பல மதங்களில் மனிதர்களால் பிரித்துக்கொள்ளபட்டாரோ
அதைப்போல. இதை விதி இருப்பவன் தெரிந்து கொள்வான் என காரணமும் சொல்லிவைத்தனர்.
அவ்வாறு
மறைத்து வைத்த சித்தர்கள் சூட்சுமமாக இன்றைக்கும் மனித குலத்திற்கு வழிகாட்டி
வருகின்றனர். வரிசையில் கடைசியில் நின்ற என்மீதும் அவர்கள் பார்வைப்பட்டது. இந்த மருந்தை
அறிந்துகொள்வதற்கு எனக்கு மானசீக குருவாக அகத்திய பெருமானும் பிரத்தியட்ச
குருக்களாக மேதைகள் சித்த வைத்தியர் டாக்டர்
ஜட்ஜ் பலராமையா அவர்களும் சித்த வைத்தியர் திரு. வேங்கிடாசலபதி அவர்களும் தங்களது படைப்பின், பாடத்தின்
வழி வழிகாட்டியுள்ளனர்.
முயற்சி
செய்யுங்கள் அதில் வெற்றிபெறுங்கள். சித்த பெருமக்கள் வழிகாட்டுவர்.
சற்குருவும் சந்நிதியு
மான தெங்கே!
சாகாத காலெங்கே வேகாத் தலையுமெங்கே!
முப் பொருளுமொரு பொருளாய் நின்ற தெங்கே!
முனையெங்கே தலையெங்கே முகமும் மெங்கே!
நற்கமலமா யிரத்தெட் டிதழு மெங்கே!
நாலு கையொரு பாதமான தெங்கே!
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர் தம்மை
இறைவ னென்றே கருதி யியம்பலாமே!
சாகாத காலெங்கே வேகாத் தலையுமெங்கே!
முப் பொருளுமொரு பொருளாய் நின்ற தெங்கே!
முனையெங்கே தலையெங்கே முகமும் மெங்கே!
நற்கமலமா யிரத்தெட் டிதழு மெங்கே!
நாலு கையொரு பாதமான தெங்கே!
இப்பொருளை அறிந்துரைக்கும் பெரியோர் தம்மை
இறைவ னென்றே கருதி யியம்பலாமே!
------- என்பது அகத்தியரின் வாக்கு
அமுத கலசத்துள்ளே :
அமுத கலசத்துள்ளே
எப்படி இருக்கும் என்றால் ஆறாதார
நிலை மனிதனுக்கு எப்படி அமைந்துள்ளதோ அதைப்போலே ஆறாதார அடுக்காக
பின்வருமாறு அமைந்துள்ளது.
மூலாதாரம் - குண்டலி சக்தி
பாம்பாக
சுவாதிஷ்ட்டானம் - பிரும்மநிலை
நாற்கோணமாக
மணிப்பூரகம் - விஷ்ணு பீடமாக
பிறைகோணம்
அனாகதம் - ருத்ர
பீடமாக முக்கோணம்
விசுத்தி - மகேஸ்வர பீடமாக அறுகோணம்
ஆக்ஞை - புருவமத்தியில் சதாசிவ விந்துவாக
இதுவே அள்ள
அள்ள குறையாத அட்சய பாத்திரம்.
இது .....
விந்துவுடன் நாதம்
கூடிவிளைந்துமே இருக்கையில்
நொந்துமேவி வேறதாக
நோக்கினால் கிடைக்குமோ
சந்திரன் கலையினால்
ஜனித்த நாதம் விந்துவாம்
அந்த கன்போல்
சுற்றினாலகப் படுவதில்லையே
இதையே ....
அப்புயுப்பு யென்று
சொல்லும் அரியசூத சுத்தநீர்
இப்புவிச் சரக்குகட்கு
ஏமனா யிருக்கையில்
வைப்புவைத்த உப்பைவிட்டு
வல்லமைகள் பேசினால்
தப்புண்டாகும் பொய்மை இல்லைசயிலநீ
ரறிந்திடே .... என்றார்
நாயனார்.
இதன் தன்மை யாதெனில்
அகரம் உகரம்
ஆண் பெண்
ரவி மதி
அமுரி புளி
பீஜம் கோஜம்
சூரியன் சந்திரன்
பரி சூதம்
சிவம் சத்தி
வீரம் பூரம்
காரம் சாரம்
காக்கலு மாகுங் கரணங்கள் நான்கையுங்
காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே.
அகக்கலன் நான்கையும், அமிழ்தகலை பதினாறையும், உயிர்ப்பினையும் திருவருள் துணையால் அடக்கவல்லார் திருவடியுணர்வில் கருத்தூன்றி நிற்பர். கலை பதினாறு - அமுதகலை 16
காக்கலு மாகுங் கலைபதி னாறையுங்
காக்கலு மாகுங் கலந்தநல் வாயுவுங்
காக்கலு மாகுங் கருத்துற நில்லே.
அகக்கலன் நான்கையும், அமிழ்தகலை பதினாறையும், உயிர்ப்பினையும் திருவருள் துணையால் அடக்கவல்லார் திருவடியுணர்வில் கருத்தூன்றி நிற்பர். கலை பதினாறு - அமுதகலை 16
நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியிது வாமே.
நடுநாடிவழியாகச் செல்லும் உயிர்ப்பு ஒடுங்கிநின்றது. அது தூண்போன்று அசையாமலும் ஒளிபோன்று விளக்கமாயும் அமைய அமுத கலையிடத்து அம்மையும் அப்பனும் (சத்திசிவம்) இயைந்தியக்கும் எழிலை உணர்ந்தால், மருளானது தெருளாக மாறும். இதுவே தாள் தலைக்கூடும் வழியாகும்.
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியில்
மலைவற வாகும் வழியிது வாமே.
நடுநாடிவழியாகச் செல்லும் உயிர்ப்பு ஒடுங்கிநின்றது. அது தூண்போன்று அசையாமலும் ஒளிபோன்று விளக்கமாயும் அமைய அமுத கலையிடத்து அம்மையும் அப்பனும் (சத்திசிவம்) இயைந்தியக்கும் எழிலை உணர்ந்தால், மருளானது தெருளாக மாறும். இதுவே தாள் தலைக்கூடும் வழியாகும்.
அண்டமெழுகு:
குக்குட வண்டம்
குலாவிய பதினொன்று
வெக்கு உடைத்து வெள்ளைக் கருவேறு
மக்குட மஞ்சட் கருவேறு வாங்கிட்டு
ஒக்குவெருக்கம் பாலிதில்ரெண்டு வார்த்திடே
வார்த்திட்டு வெவ்வேறாய் வைத்திது ரெண்டில்
கோர்த்திட சீனத்தை கொட்டொ ருகாசிடை
கார்த்திட்ட மஞ்சள் கருவிலே காரமும்
போர்த்திட வீரமும்புக
ரெண்டுகாசிடே
இட்டு விரலாலித
மாகமத்திக்க
மட்டான வெள்ளைமருண்டு ஜலமாகும்
கொட்டான மஞ்சட் கருவது கூழாகும்
வெட்டான வெள்ளை ஜலத்தையிதில் வாரே
வார்தேயுருக வளமாக மத்திக்கில்
ஏர்த்தே நற்கார மிதமாம் வெடியுப்பு
போர்த்தே ஜெயசாரம்
புகழ்வெள்ளை
கண்டரும்
சேர்த்தேஇது நான்கும்
சிறக்க நாற்காசிடே
காசிடனாலு காரத்தில்
வீரத்தை
ஓசிடமஞ்சள் கருவிலூறப் போட்டு
வசிடக்கைக் கொண்டு மத்திக்க மத்திக்க
பாசிடக்கமது பற்பத்தில் மெழுகாமே
மெழுகான குக்குடத்தண்ட நவலோகம்
தழுவப்புடம் போட தங்கத்தில் தங்கமாம்
வழுவாச்சரக் கெல்லாம் வாட்டிடக் கட்டுண்ணும்
நழுவாது ஒன்றும் நலமான சித்தியே
எனவே
.....
சாதனங்கள் செய்தவர்கள் சாகார் குயிலே - எல்லாத்
தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேகார் குயிலே
மாதவங்கள் போலும் பலன்வாயாக் குயிலே - மூல
மந்திரங்களால் மகிமை வாயாக் குயிலே
எட்டிரண் டறிந்தோர்க் கிடரில்லை குயிலே - மன
மேகாமல் நிற்கில்கதி யெய்துங் குயிலே
திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகில ராரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே.
அழியும் படியை அறிகில ராரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே.
ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.
கண்ணுக்குள் நீயிருந்து காண்பதைப் பாரேனோ,
நெஞ்சுக்குள் நீ நின்று நினைப்பதைத்தான் பாரேனோ,
எண்ணத்தில் நீ ஆடும் எண்ணிக்கை அறியேனோ,
இல்லாமல் நீ இருந்தாய் இருந்தும் இல்லாமல் நான்..
நெஞ்சுக்குள் நீ நின்று நினைப்பதைத்தான் பாரேனோ,
எண்ணத்தில் நீ ஆடும் எண்ணிக்கை அறியேனோ,
இல்லாமல் நீ இருந்தாய் இருந்தும் இல்லாமல் நான்..
பிரணவபொருள் = அகரம் (சூரியன்) (காரம்);
உகரம் (சந்திரன்) (சாரம்)
ரவியும் மதியும் ஒன்றானால் மாளுவதேன்
அகரம் + உகரம் = மகரம் (ஓஹோ
ஓஹோ தங்கரதம் உதித்ததம்மா மண்ணோடு
புல்முதலாய் ஏமமாச்சு)
அமுத கலசத்துள் காற்றும் நெருப்பும்
கண்ணுக்கு தோன்றாத சிவ தன்மையுடையது, மண்ணும் தண்ணீரும் சக்தி தன்மையுடையது.
வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்
கெட்டாத புஷ்பம் இறையா தீர்த்தம் இனிமுடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத மூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே ---- பட்டினத்தார்
வழலை = சுண்ணம் நீர் = சவுக்காரம்
ந ----- மண், தங்கம், சீனம்
(எ) சுண்ணம்
ம ----- நீர், காரீயம், வெடியுப்பு
சி ----- நெருப்பு, செம்பு, கரியுப்பு
வ ----- வாயு, இரும்பு, நவசாரம்
ய ----- ஆகாயம், நாகம், நவசாரம்
----- சத்துருவால் கொன்று மித்துருவால் எழுப்புவதே ரசவாத வித்தை.
காயாம்பட்டிக் குளத்துக்குள்ளே யொரு சாயாமூலி முளைத்திருக்கு. இம்மூலியை அகரம் வேறு
உகரம் வேறு பிரித்துக்கூட்டி வாலையில் வடித்து மகரமெனும் மகாதிராவகம்
இறக்கி உட்கொண்டுவர திரித்துவம் ஒன்று கூடி உலகம் உள்ளவரை உடலைவிட்டு பிரியாதிருக்கும். இதுவே காயகற்பமாகும்.
வாயு, வன்னி, வருண பூதங்கள்
ஒன்று சேர்ந்து பஞ்ச பூதங்களால்
திருமூர்த்தி அம்சம் அடைந்த நீரை எந்த வகையிலும் பிரிக்கமுடியாது. உடலை விட்டு
உயிரை பிரிக்கமுடியாது. நீரைத்தேடி உண். நிலைபெறு
கற்பமூலி பச்சிலையிலும் உண்டு. ஆனால்
உடல் இதனால் தசதீட்சை
பெறாது. பிரணவ கற்பம்
ஒன்றே சொரூபசித்தியை தரவல்லது.
மண் நீர் நெருப்பு
காற்று ஆகாயம் இதில்
மத்திமம் வகிக்கும் நெருப்பானது மண்
மூலமாக தண்ணீரையும் தண்ணீர்மூலமாக காற்றையும் தன்னுள்
ஐக்கியபடுத்திக்கொண்டுள்ளது. இதுவே ருத்ராம்சம்.
அடங்கா யோகமும் ஆதாரமாறும் அவத்தை
ஐந்தும் விட்டேறிபோன வெளிதனிலே வியப்பொன்று
கண்டேன் வட்டாகிச் செம்மதிப் பாலூரலுண்டு மகிழ்ந்திருக்க எட்டாத பேரின்பம் என்னை விழுங்கியதே - என்றார் பட்டினத்தடிகள்.
எட்டுத் திக்கும் பதினாறு கோணமும் எங்குமொன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கும் ஜோதியை மூடரெல்லாம்
தட்டிச் சுருட்டி கக்கத்தில் வைப்பார்
கருத்துள்வையார்
பட்டப் பகலை இரவென்று
கூறும் பாதகரே ------
என்றார் பட்டினத்தடிகள்.
(எட்டுத்திக்கு = அ (எட்டு)
= அகரமாகிய சூரியன்)
(பதினாறு கோணம் = பதினாறு கலைகள்
கொண்ட உகரமாகிய சந்திரன்)
கற்ப சாதனை செய்துக்கொண்டுவர ரத்தமயமான இட்சரீரம் விந்து மயமாக
மாறிவிடும்.
எனவே சுண்ணாம்பில் இருக்கிறது சூட்சுமம், சூட்சுமத்தில் இருக்கிறது மோட்சம்.
----- சுன்னத்தை
இளக்க வேண்டின் சமபாகம் நவாச்சாரம்
சேர்த்து அரைத்து பனியில் வைக்க
ஜலமாகிவிடுகிறது. பிறகு காற்றாக
பரிணமித்துவிடுகின்றது. சரீரமும் அதுபோலே லயமாகிறது.
உண்ட நீரது உன்னுள்ளே
பாய்ந்திடின் சண்டனில்லை சாக்காடு எய்துவதில்லை காண்.
எட்டிரண்டும் பத்து இனியதொரு தீக்ஷை அட்டமாசித்தி விளையாடுமே.
அண்டம் கடுக்காய் ஆருமறிந்திலர்
அண்டம் கடுக்காய் அருமையறிந்தவர்
அண்டம் கசடு அறுத்து
அணைதனில்
அண்டத்தடுத்து அரூபியுமாவாறே
----- யோகத்தில் இருகால் பற்றி ஆஞ்ஞாஸ்தானத்தில் வாசம் செய்ய மதிபால் சுரக்கும். அது சுண்ண நீராலான விந்து தேகத்தை இளக்கி மெழுகு தன்மையடையச்செய்யும். இது ஜலவடிவாகி பின் காற்றாக பரிணமித்து சூட்சும சரீரம் வாய்க்கும்.
சாயை மறையும்
தன்னுடம்பு தனக்குள் ஓயாமல் நடுவோடும்
காயம் உயரபறக்கும் உன் மனையைத் தாண்டும்.
நாதமும் விந்தும் சேர்ந்தாக்கால் நாதமங்கே தெளியும்.
தெளிவைக்கொள்.
பணிந்துவிடும் வாசியது
கொண்டால் கற்பூர தேகமாகும்.
தூரதிருஷ்டி கிட்டும்.
ஞானத்தாலாய உடம்பின் பயனன்றோ
மோனத்தாலாய உணர்வு
---- வள்ளுவர்
அறையார்ப் போர்கழலார்ப்ப அணியார்த்தில்லை அம்பலத்துள் நடமாடும் அழகன்தன்னைக் கறையார்மூவிலை நடுவேற்க்கடவுள் தன்னைக் கடல்நாகைக் காரோணங்
கருதினானை இறையானை என்னுள்ளத்துள்ளே விள்ளாதிருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற பொறையானைப் புள்ளிருக்கும் வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே
---- அப்பர்
கருமருவு குகையனைய காயத்தினடுவுட் களிம்புதோய் செம்பனைய யான் காண்டகவிருக்கநீ ஞான
அனல் மூட்டீயே கனிவுபெற உள்ளுருக்கிப் பருவமதறிந்து நின்னருளான குளிகைக்கொடு பரிசித்து வேதிசெய்து பத்துமாற்றுத் தங்கமாக்கியே பணிகொண்ட பக்ஷத்தை என்சொல்லுவேன்
---- தாயுமானார்.
ரசவாத கற்ப மருந்து
எனப்படுவது ஆவியாகும் "கரு நீரே"
தவிர வேறல்ல.
நான்கு அடிப்படை தனிமங்களையும் கற்ப மருந்திலிருந்து பிரித்து எடுத்த பிறகு
மீதி என்ன இருக்கிறதோ
அதுவே ஆவியாகும் கற்ப மருந்தாம்.
அது வாயு தன்மை
பெற்று காற்றில் மிதக்கும் சிறகு
போல நட்சத்திரங்களுக்கு நடுவே மிதக்கும்
தன்மையை பெற்றுள்ளது.
பொருள் ----- கெந்தி ----- உகரம் ----- சூரியன்
உடல் ----- உப்பு (அப்பு, கம்பிஉப்பு)
----- மகரம் ----- அக்னி
கட்டியது கந்தகம்; ஜலமாக இருப்பது பாதரசம்; இவையிரண்டும் உப்பில் உறவாகியுள்ளது.
வேவாத முப்பூவை வேண்டியுண்டால் பாரில் சாகாமல் வாழ்வாரடி குதம்பாய்
ஈராறு மொன்றும் ஈரெட்டு மொன்றும் சேராத வீணர்கள் ஜெபம் பண்ணுவார்கள்
ஊசரமாகிய உப்பினைப் பானையிலிட்டுத் தீ மூட்டியதும்
அதிலிருந்து வியாபிக்கும் சோம பானத்தை
மேலெழப் பிடித்து அடியிலிருக்கும் சூரியகாரத்துடன் கலக்கி இருகாலும்
ஓருருவாக வியாபித்த காற்றைக் கைவசப்படுத்தும் உபாயம் அறிந்தாரில்லை.
அதைப்பிடிக்கும் தந்திரம் அறிந்தவர்க்கு யமனை வெல்லக்கூடிய வல்லமையுண்டு.
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க் குடையாமல் ஊழி இருக்கலு மாமே.
ஜலதன்மையுடைய காரீயத்தை தகடாக அடித்து
நீர் அம்சத்தையுடைய வெடியுப்பை மண்
அம்சத்தையுடைய சுண்ணத்தில் கலந்து ஆட்டமுரியினால் அரைத்து தகட்டிற்கு கவசம் செய்து
புடமிட கருவங்கம் கடுங்கார சுண்ணமாகிறது. இதற்கு சமம் நவாசாரம்
சேர்த்து அரைக்க ஜெயநீர் ஆகிறது.
இது சகல பாஷானங்களையும் உலோகங்களையும் கட்டவல்லது
நவலோக பூபதியின் கரு:
பொன்னிமிளை, வெள்ளை (எ) ரசிதம்
(எ) வெள்ளி, தாமிரம் (எ)
செம்பு, அயம் (எ) இரும்பு,
வங்கம் (எ) கருவங்கம்
(எ) காரீயம், நாகம் (எ) துத்தநாகம்,
வெங்கலம், வெள்வங்கம் (எ) வெள்ளீயம்,
புலவன் (எ) பித்தளை,
ஆகிய ஒன்பது உலோகத்துடன்
விந்து (எ) கந்தகம்
(எ) கெந்தி, சூதம் (எ)
பாதரசம் (எ) ரசம்,
இரண்டையும் சேர்த்து இத்துடன் சங்கு
பாஷாணம், கௌரி, மனோசிலை, மால்தேவி
(எ) அரிதாரம் (எ) தாரம்,
வீரம், பூரம், சாதிலிங்கம், மிருதார்சிங்கி, காடிகாரம் இவைகளெல்லாம் சமஎடை
சேர்த்து அதில் அமுரி சேர்த்தால்
இளகி ஒன்றாகும். இதை சூடேற்ற
இறுகி பற்பமாகும். மலைத்தேன் விட்டு மத்தித்து
உண்ண சகல நோய்களும்
தீரும்.
செம்பை சூடேற்றி இதை சுருக்கு கொடுக்க ஏமமாகும்.
பஞ்சபாஷாணகட்டு லிங்கம்:
சதுரகள்ளி பாலில், சுத்தி செய்த
அபிரக
பாஷாணம், கற் பாஷாணம்,
சூத பாஷாணம், துத்த பாஷாணம்,
சீலை பாஷாணம் ஆகியவை கலந்து
மூடிவைக்க பாஷாணமானது தெளிந்த நீர்மமாகும்.
பின்னர் அதனை அயச்சட்டியில் வைத்து நான்கு சாமம்
சுருக்குபோட பாஷாணம் குழம்பாகும். இதை அச்சியில்
வார்த்து சூரிய புடமிட
இறுகி பாறைபோலாகும்.
கெளனமணி
:
கேட்டிடுவாய்
கெளனமதிற் பரந்து நோக்க
கிளரிடுவேன்
கெளனமணி கவனம் வைப்பாய்
ஆட்டிடவே
செம்மறியின் ஆட்டுக்குட்டி
அதன்மேல்
மேனிச்சார் விட்டறைத்து
மாட்டிடவே
ரசம் சேர்தான் ஒன்று
மரிவாயுமபானமது
தைத்துக்கேளாய்
தாட்டிகமாய்
ஆட்டை முடாவிட்டுமூடி
தாக்கிடுவாய்
மண்டலந்தான் பூமிக்குள்ளே
உள்ளாகி
நடந்து எடுத்துப்பாரு
உரகம்போல்
ரசம்திரண்டு மணியாய் நிற்கும்
மெள்ளஅதை
யெடுத்துமறு சட்டியிட்டு
மேதையின்
நீரூற்றி சுண்டக்காய்ச்சி
கள்ளமற
கட்டி கற்போலாகி நிற்கும்
கண்டவுடன்
கனபோதை ககனம் பாயும்
சள்ளையற
மணிவைத்து தேவிபூசை
சாற்றியொரு
மண்டலமும் ஜெபித்துபோற்றே
போற்றியுடன்மணி
எடுத்து வாயிலிட்டு
பூரணத்திலிருந்தூது
ககனம் போவாய்
நாற்றிசையும்
நொடிக்குள்ளாய் சுற்றிதாண்டி
நாலிரண்டு
எட்டு சரக்கூடம்
தோன்றிடவே
தேவிசக்தி காற்பாளுண்மை.
அம்மையே
அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த வாரமுதே
பொய்மையேயாய
பொழுதினைச் சுருக்கம் புழுத்தலைய னேன்றனக்கு
செம்மையேயாய
சிவபதமளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே
யுன்னை சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவதினியே
அகத்தியர் அடி சரணம்
தொகுத்தவன் நாவுக்கரசன்
No comments:
Post a Comment